புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பாஜகவினர் மழை வெள்ள பாதிப்புகள் ஆய்வு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் பாஜகவினர் சமீபத்தில் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர் மேலும் புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்து பாஜகவினர் மீனவர்களுக்கு ஆறுதல் கூறினர் இதில் பாஜக மாவட்ட பொது செயலாளர் பாலாஜி குருக்கள் மாவட்ட துணை தலைவர் ராஜசேகர் மீனவரணி மாவட்ட தலைவர் ஞானசுந்தர் மிலிட்டரி மாரியப்பன் வைத்தியநாதன் ரமேஷ் சின்னையன் பன்னீர்செல்வம் செல்லக்கண்ணு உள்ளிட்ட பல நிர்வாகிகள் இருந்தனர் மீனவ பஞ்சாயத்து தலைவர் குட்டியாண்டி மற்றும் பஞ்சாயத்தார்கள் இருந்தனர்.
No comments