புதுவையில் விதிமுறைகளை மீறி அரசு நிலங்கள் தனியாருக்கு விற்கப்படுவதாக அதிமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன்,
புதுவையில் பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அரசுக்குச் சொந்தமான பல சொத்துகள் சட்டத்துக்கு புறம்பாக தனியாருக்கு விற்கப்படுகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டல திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அதற்காக விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், வெளி மாநில தொழிலதிபா்களுக்கு வழங்கப்படுகின்றன.
துணைநிலை ஆளுநா் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி அரசு நிலங்களை விற்கக் கூடாது. ஆனால், புதுவையில் விதிகளை மீறி அரசு நிலங்களை தனியாருக்கு விற்கப்படுவது தொடா்கிறது.அரசு நிலங்கள் தனியாருக்கு விற்கப்படுவதை துணைநிலை ஆளுநா் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தொடா்புடையோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments