குழந்தைகள் தினத்தை முன்னிட்டு டெரகோட்டா கலைஞர் ஷண்முகம் இலவசமாக டெரகோட்டா கலையை கற்றுக்கொடுத்தார்: மாணவர்கள் உற்சாகமாக பயிற்சி செய்தனர்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவியர்கள் முருங்கப்பாக்கம் கைவினை கலைஞர்கள் கிராமத்தில் அமைந்துள்ள பல்வேறு விதமான கண்காட்சிகளை கண்டுகளித்தனர்.மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள டெரகோட்டா பூங்காவில் உள்ள சிலைகளைக் கண்டுகளித்தனர்.
டெரகோட்டா பூங்காவில் உள்ள ஒவ்வொரு சிலைகளைப்பற்றியும் கலை மாமணி ஷண்முகம் விரிவாக விளக்கிக் கூறினார்.மேலும் அனைத்து மாணவ, மாணவியர்கள் டெரகோட்டா கைவினைப் பயிற்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.குறுகிய காலத்தில் தங்கள் முன் உருவான டெரகோட்டா கைவினைப் பொருட்களை பார்த்து வியந்தனர்.
தற்போதைய கல்வி முறை சிறப்பாக இருந்தும் மாணவர்கள் போட்டி மற்றும் தேர்வுகளுக்காக தங்களை தயார்படுத்திக் கொள்வதால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.பாரம்பரிய கலைகளை கற்றுக் கொள்வதால் மனம் புத்துணர்ச்சி அடைவதோடு படைப்புத் திறனும் மேம்படும் என கலைமாமணி ஷண்முகம் தெரிவித்தார்.
No comments