நெற்குப்பையில் "உலகம் சுற்றிய தமிழர் சோமலே" நினைவு தினம் கவிஞர்கள் எழுத்தாளர்கள் பங்கேற்பு!.
தொடர்ந்து இக்காலத்தில் நூலகத்திற்கு சென்று பயனுள்ள கருத்தால மிக்க நூல்களை படிப்பது மக்கள் மத்தியில் மிகவும் அரிதான செயலாக ஒன்றாக மாறி விட்டது. இந்த இளம் வயதில் மாணவர்களாகிய நீங்கள் பள்ளிக்கு சென்று படிக்கும் பாட புத்தகங்களோடு சமுதாய சிந்தனையும், பொது அறிவையும், நாட்டின் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளையும் அதிலிருந்து நாம் பெரும் படிப்பினையும் நம்மில் வளர்த்துக் கொள்ள நாளிதழ்கள்,நல்ல நூல்களில் இருந்து தான் பகுத்தறிவு என்ற நற்சிந்தனை கிடைக்கின்றது. மேலும் இன்று நாம் அனைவரும் யாருடைய நினைவு தினத்தில் இங்கு ஒன்று கூடி உள்ளோமோ அந்த சோமலே தமிழின் மீது கொண்ட அதீத பற்றின் காரணமாக அவரை கௌரவிக்கும் பொருட்டு அவர் இயற்றிய அனைத்து நூல்களையும் தமிழக அரசு அவற்றை அரசுடைமையாக்கி அவரின் வாரிசுக்கு ரூபாய் பத்து லட்சம் தந்து கௌரவித்துள்ளது.
எனவே நாம் ஒவ்வொரு நாளும் நமது அறிவை வளர்த்துக் கொள்ள தினம்தோறும் நற்சிந்தனை கொண்ட நூல்களை படிப்பவர்களாக நம்மை நாமே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எடுத்துரைத்தனர்.தொடர்ந்து இங்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.
நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சபா ரத்தினம்,சொக்கலிங்கம், பழனியப்பன், சோமலே சோமசுந்தரம், சக்ரியாஸ், பாஸ்கரன் சேதுக்கரசி ஆச்சி, மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments