Breaking News

பொறையாரில் தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது.



மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சங்க மயிலாடுதுறை மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது சமூக நீதி இட ஒதுக்கீட்டுக்கு எதிரான தனியார் மய கொள்கையை எதிர்த்து, தமிழகம் முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளுக்காக போராடுவோம் அணி திரள்வோம் என்ற முழக்கத்தோடு மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட பேரவை கூட்டம் தரங்கை பேர் செயலாளர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது இதில் தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சங்க மாநில தலைவர் அறவாழி, TNGEU மாநில பொதுச் செயலாளர் கலியமூர்த்தி, மாநிலத் துணைத் தலைவர் திருநாவுக்கரசு, உள்ளாட்சித் துறை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் c. நாராயணன் மாவட்ட செயலாளர் தொல்காப்பியன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் பணி வரன்முறை கால முறை ஊதியம் சம வேலைக்கு சம ஊதியம் பெற்றிட, குடும்ப நலக் காப்பீடு விபத்து காப்பீடு ஆகியவற்றுடன் கூடிய சமூக பாதுகாப்பை உறுதி செய்திட, சமூக நீதிக்கு எதிரான ஒப்பந்த முறையில் ஊக்குவிக்கும் அரசாணை 138, 152 மற்றும் 10 ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்திட, குறைந்தபட்ச ஊதியம் அரசாணை எண் 2 (D) 62, தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை நாள்: 11.10.2017-ன் படி ஊதியம் பெற்றிட, தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குனர் அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் 26 ஆயிரம் பெற்றிட, மேலும் பல்வேறு சிறப்பு கோரிக்கைகள் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments

Copying is disabled on this page!