புதுச்சேரி வழியாக கடலூர் சென்ற தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு..
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி, நாகை மாவட்டங்களில் அரசு ஆய்வுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்துவிட்டு நேற்றிரவு புதுச்சேரியில் தங்கினார்.
தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு ஆய்வுக்கூட்டம் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூலகம் திறப்பு உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை புதுச்சேரியில் இருந்து கடலூர் சென்ற தமிழ்நாடு துணை முதல்வர், திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில்,திமுக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., பொருளாளர் செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ., துணை அமைப்பாளர்கள் தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
No comments