தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் சீர்காழியில் மறைந்த நடிகர் டெல்லி கணேசுக்கு மௌன அஞ்சலி..
மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி தென்பாதியில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் மறைந்த திரைப்பட நடிகர் டெல்லிகணேசுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடந்தது. மாவட்ட தலைவர் கடவாசல் ரமணன் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசகர் டாக்டர். கோதண்டராமன், மாநில பொது செயலாளர் சசிகோபாலன், சீர்காழி கிளைத் தலைவர் தியாகராஜன், செயலாளர் வெங்கட்ராமன்,லெட்சுமிநாராயணன்,தென்பாதி கிளைத்தலைவரும், மாவட்ட துணைத் தலைவருமான அருண். வைத்தியநாதன், குத்தாலம் கிளை தலைவர் முரளி,மாவட்ட துணைத் தலைவர் கோபி, மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி பேரன் சுப்ரமணியன், சீனிவாசன், மகளிரணி தலைவி ஹேமமாலினி முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்று மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து டெல்லி கணேஷ் புகழ் குறித்து பேசினர். அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்திட தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் சீர்காழி, தென்பாதி, குத்தாலம், கடவாசல், அனுமந்தபுரம் கிளைகளின் தலைவர்கள், செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.
No comments