மின்சார வாகனத்திற்கு மாறுங்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தை துவங்கி வைத்தார் குடியாத்தம் எம்எல்ஏ.
தமிழ்நாடு மின்சார வாரியம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோட்டத்தின் சார்பில் ஒரு நிலையான உலகத்திற்கு மின்சார வாகனங்களுக்கு மாறுங்கள் என்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இதில் குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தர்ராஜன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மற்றும் மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன் உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் மற்றும் தாட்டன பல்லி ஊராட்சி மன்ற தலைவர் சக்தி தாசன் மின்சாரத்துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டு குடியாத்தம் முக்கிய நகர சாலைகளில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments