புதுச்சேரி சாரம் சுப்ரமணியர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையின் போது முருகர் சிலையின் முகத்தில் இருந்து வியர்வை துளிகள்..
புதுச்சேரி சாரம் பகுதியில் சுப்ரமணியர் கோவில் உள்ளது. கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா அங்கு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி, நேற்று இரவு, முருகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, தீபாரதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அப்போது, முருகர் சிலையின் முகத்தில் இருந்து, திடீரென வியர்வை துளிகள் கொட்டியது. அதை பார்த்த பக்தர்கள், பரவசமடைந்து அரோகரா என முழங்கி வழிபட்டனர். இத்தகவல் அறிந்து அப்பகுதியில் பொது மக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
No comments