சந்திரப்பாடி ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கையாக புயல் பாதுகாப்பு மையம் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம்..
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி, மயிலாடுதுறை மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அதன்படி, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சந்திரப்பாடி ஊராட்சியில் புயல் பாதுகாப்பு கூடத்தையும், அரசு உயர்நிலைப் பள்ளியையும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அங்கு குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, சந்திரப்பாடி ஊராட்சி சின்னூர்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை பாட புத்தகங்களை வாசிக்க செய்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் கற்று வரும் 3-ம் வகுப்பு மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடி, கற்றல் திறனை ஆய்வு செய்தார்.
சந்திரப்பாடி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 16 பயனாளிகளுக்கு தலா ரூ.3 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கான்க்ரீட் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதையொட்டி, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, மஞ்சுளா உடன் இருந்தனர்.
No comments