Breaking News

கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பேருந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

 


புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம்,

புதுச்சேரி அரசு மற்றும் மத்திய பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தேசிய ஞான கும்பம் - 2024 விழா புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.வரும் 21 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், இந்திய அறிவு முறைகளை கொண்டாடுதல், கல்வியில் தாய் மொழி கல்வியை செயல்படுத்துதல் மற்றும் கற்றல்களை ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற உள்ளது என கூறினார்.

இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, உத்தராகாண்டு மாநில கல்வி அமைச்சர் தான்சிங் ராவத், மயிலம் பொம்மபுர ஆதீனம், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர் என்றும்,இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பேராசிரியர்கள், கல்வியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை கேள்விக்கு பதில் அளிக்க அமைச்சர் நமச்சிவாயம், பள்ளி மாணவர்கள் தொடர்ந்து, கல்லூரி மாணவனுக்கும் இலவச சிறப்பு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், பல்கலைக்கழகத்தில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

No comments

Copying is disabled on this page!