ஸ்ரீ முத்துராஜம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 11 வகையான சாக்லேட்டுகளை பயன்படுத்தி 135 நிமிடங்களில் நேருவின் உருவத்தை உருவாக்கி அசத்திய பள்ளி மழலையர்கள்....
மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் ஸ்ரீ முத்துராஜம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நேருவின் 135 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் 20 x 30 அளவிலான பலகையில் 14 மாணவர்கள் இணைந்து 11 வகையான சாக்லேட்டுகளை பயன்படுத்தி 135 நிமிடங்களில் நேருவின் உருவத்தை உருவாக்கி அசத்தினர்.
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் ஸ்ரீ முத்துராஜம் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. மறைந்த ஜவஹர்லால் நேருவின்135 வது பிறந்தநாளில் 135 நிமிடங்களில் 14 பள்ளி மழலையர்கள் 11 வகையான சாக்லேட்டை கொண்டு ஜவஹர்லால் நேருவின் உருவப்படத்தை தத்துருவமாக வரைந்து அசத்தினார்கள். இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் பி.சிவசங்கர், பள்ளி நிர்வாகி மதன், முதல்வர் சீனிவாசன், துணை முதல்வர் பூவிழி ஆகியோர் மாணவர்கள் உருவாக்கிய சாக்லேட்டால் உருவான நேரு உருவத்தினை கண்டு பாராட்டினர். இவ்விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். வரைந்த ஓவியத்தை காட்சி பொருளாக வைத்து பள்ளியின் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.
No comments