வாக்காளர் சிறப்பு முகாமை அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் பள்ளமடை பாலமுருகன் நேரில் ஆய்வு.
நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள மேரி ஆர்டன் நடுநிலைப்பள்ளி, மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாம்களில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், திருத்தம் போன்ற பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்காளர் பட்டியலில் புதிய சேர்க்க விண்ணப்பித்த புதிய வாக்காளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வந்துள்ளார்.
அதனை இந்த திமுக அரசு தற்போது நிறுத்தி விட்டது. எனவே மீண்டும் பள்ளி குழந்தைகளின் நலத்திட்டங்களை செயல்படுத்திடப் எடப்பாடியாருக்கு வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்கு அளியுங்கள் என கேட்டுக்கொண்டார். வாக்காளர் சிறப்பு முகாம் ஆய்வின் போது தச்சை கிழக்கு பகுதி செயலாளர் சிந்து.S.முருகன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் கணபதி சங்கர ராமன், மாவட்டம் மகளிர் அணி இணைச் செயலாளர் மாரியம்மாள், பகுதி எம்ஜிஆர் மன்றம் முத்துசெழியன், பகுதி அம்மா பேரவை முப்பிடாதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.
No comments