திருப்பத்தூரில் சிறு குறு, மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான சிறப்பு பயிற்சி முகாம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களால் தயாரிக்கக்கூடிய பொருட்களை சந்தை படுத்த தேவையான ஆலோசனைகள், குறைந்த செலவினங்களில் பொருட்கள் தயாரிப்பது குறித்தும் மற்றும் தொழில்கள் மேற்கொள்ளும் பகுதிகளில் தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்து இப்பயிற்சி முகாமின் வாயிலாக விரிவாக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக எடுத்துரைப்பது தான் இம்முகாமின் முக்கிய நோக்கமாகும்.
குறிப்பாக தூய்மையாக வைத்துக்கொள்ளும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான இத்திட்டத்தில் இந்நிலையை கடக்க 1.2 இலட்சம் Excluding Tax செலவாகும். ஆனால் மானியத்திற்கு பிறகு மாதம் ரூ.1000/- மட்டும் செலவாகும். இத்திட்டத்தில் 95% மானியம் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. இதனை 6 மாத காலத்திற்குள் நிறைவு செய்யலாம் என்று தெரிவித்து, இப்பயிற்சி முகாமில் மாவட்ட பொது மேலாளர் பாஸ்கரன் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments