Breaking News

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்!

 


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தவர்கள் பங்கேற்று, தங்கள் மனுக்களை இரண்டு பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறோம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

No comments

Copying is disabled on this page!