Breaking News

மாயூரநாதர் ஆலயத்தில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

 


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட குற்றம் நீங்க உமையவள் அபயாம்பிகை மயில் உருவம் கொண்டு சிவபெருமானை பூஜித்து பேறு பெற்ற தலம் ஆகும். பல்வேறு சிறப்புகளையுடைய இக்கோயிலில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. கொடிமரம் முன்பு எழுந்தருளியுள்ள நந்தியபெருமானுக்கு எண்ணெய் பால், பண்ணீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் நந்தி அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. பிரசாதமாக அபிஷேகம் செய்யப்பட்ட சந்தனம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

No comments

Copying is disabled on this page!