கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு லாஸ்பேட்டை சிவசுப்பிரமணிய ஆலயத்தில் எழுந்தருளிய சிவகால பைரவர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்..
சிவபெருமானின் 64 வடிவங்களில் முதன்மையான உக்கிரமான வடிவமாக கால பைரவர் கருதப்படுகிறார். கால பைரவரை வழிபாடு செய்தால், எதிரிகள் குறித்த பயம் விலகுவதோடு, மன தைரியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியில் கால பைரவர் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த தினத்தை கால பைரவர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகின்றது. அதன்படி இன்று காலபைரவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி புதுச்சேரி லாஸ்பேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் எழுந்தருளயுள்ள ஸ்ரீ சிவகால பைரவருக்கு 1008 சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்று சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட கால பைரவருக்கு சோடச தீபாரதனை மற்றும் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு காலபைரவரை வழிபட்டு சென்றனர்.
No comments