டெங்கு மலேரியா நோய் பரவாமல் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க கோரி சமூக செயல்பாட்டாளர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை..
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்பொழுது பருவ மழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் மிதமான மற்றும் கனமழையும் பெய்து வருகிறது கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் கிராம பகுதிகளில் ஊராட்சிகளில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு இன்னல்கள் ஏற்படுவதோடு டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது இந்நிலையில் கொசு உற்பத்தியாவதை தடுக்கும் விதமாகவும் டெங்கு மலேரியா நோய் பரவாமல் தடுக்கும் விதமாகவும் ஊராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிப்பதற்கும் பிளீச்சிங் பவுடர் தெளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் எனவும் மேலும் தற்பொழுது சாலைகளில் குறிப்பாக இரவு நேரத்தில் மாடுகள் குதிரைகள் கால்நடைகள் சுற்றி திரிவதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளதாலும் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் பொதுநலன் கருதி சமூக செயல்பாட்டாளர் ஆயப்பாடி முஜிபுர் ரஹ்மான் மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
No comments