கழிவுநீர் செல்ல முடியாதபடி மின் கம்பத்தை வைத்து கழிவுநீர் வாய்க்கால் கட்டியிருப்பது தொடர்பான வீடியோ..
புதுச்சேரியில் சாலை விரிவாக்க பணிகள், கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு சாலை விரிவாக்க பணிகளின் போது நடுரோட்டில் உள்ள மின் கம்பங்களை அகற்றாமல் சாலை அமைப்பது தொடர்பான புகைப்படங்கள்,வீடியோக்கள் வெளியாகி அவ்வப்போது விமர்சனங்களை எழுப்பி வந்தது.
இதனிடையே வில்லியனூரில் இருந்து பாகூர் செல்லும் சாலையில் உறுவையாறு ஜெயம் நகர் எதிரே கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி நடக்கிறது. இந்த வாய்க்கால் கட்டும் பகுதியில் மின்கம்பம் ஒன்று குறுக்காக இருந்துள்ளது.அந்த மின் கம்பத்தை அகற்றியோ அல்லது வாய்க்காலை சற்று வளைத்தோ கட்டாமல் வாய்க்காலுக்கு மத்தி யில் மின் கம்பம் இருக்கும் வகையிலும், கழிவுநீர் ஓட வழி இல்லாத அளவுக்கு வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது.
அந்த இடத்தை சமூக ஆர்வலர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள நிலையில்,பொதுமக்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
No comments