புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து துணை வேந்தர்கள் மற்றும் கல்வியாளர்களின் அமர்வு..
ஞான கும்பம் 2024 ன் ஒரு அமர்வான இக்கூட்டத்தில், இந்தியாவின் பல்வேறு பல்கலை கழக துணைவேந்தர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.பன்முகக் கல்வி முறையை ஒன்றிணைக்கும் இந்த முயற்சியை ஷிக்ஷா சம்ஸ்க்ருதி உத்தன் நியாஸின் தேசிய செயலாளர் டாக்டர் அதுல் கோத்தாரி பாராட்டினார்.
மேலும் நவீன கல்வி முறையில் இந்தியாவின் தனித்துவமான அறிவு பாரம்பரியத்தை ஒருங்கிணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.பண்டைய ஞானத்தின் நவீன பிரபஞ்சம்,
வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் புராணங்கள் போன்ற ஆன்மிக நூல்களில் பொதிந்துள்ள ஆழமான ஞானம், மன ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற இன்றைய உலகின் முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்கும் திறன் கொண்டது என டாக்டர் கோத்தாரி குறிப்பிட்டார்.
இந்திய தத்துவத்தில் வேரூன்றிய தார்மீக மதிப்புகள் மற்றும் நெறிமுறைக் கொள்கைகளை வளர்த்து, சமுதாய நலன் சார்ந்த குடிமக்களை உருவாக்குதல் நமது பொறுப்பு என புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் தரணிக்கரசு பேசியது குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் வளமான அறிவு பாரம்பரியத்தை நவீன கல்வி முறையில் ஒருங்கிணைப்பதன் மூலம், நாம் 21-ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் பன்முகத் திறன் கொண்ட தலைமுறையை உருவாக்க முடியும்.
இந்த முயற்சி திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் எவ்வாறு சாத்தியமானது என்பதை துணைவேந்தர் கிருஷ்ணன் தெளிவாக விளக்கினார்.
No comments