மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் தாய்வழியில் ஜாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி அட்டவணை இன மக்கள், மாவட்ட ஆட்சியர் முற்றுகை..
புதுச்சேரியில் அட்டவணை என மக்களுக்கு தாய் வழியில் ஜாதி சான்றிதழ் வழங்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, வில்லியனூர் உட்பட ஒரு சில இடங்களில் தாய் வழி ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கு அட்டவணை இனத்தை சார்ந்த ஒரு சில பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் புதுவை வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். அதன் பின்னர் கூட்டம் முடிந்து வெளியே வந்த மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள் தாய் வழி ஜாதி சான்றிதழ் வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாகவும், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் தங்களுக்கு தாய் வழியில் ஜாதி சான்றிதழ் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் இது குறித்து விரைந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் இதனை அடுத்து முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
No comments