சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரியல் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
சாயர்புரம் ஜி.யு.போப் பொறியியல் கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி அருகே சாயர்புரத்தில் டாக்டர் ஜி.யு.போப் பொறியியல் கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜாபிந்த் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக எம்பவர் இந்தியா கௌரவச் செயலாளர் சங்கர் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் போதை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நல பணி திட்ட அலுவலர் டென்னிசன் செய்திருந்தார். இதில், கல்லூரித் துறை தலைவர்கள் விஜயலட்சுமி, ஜேஸ்பர்லின், செல்வரதி, ஆனந்தி, ஜாக்சன், டென்னிசன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments