வில்லியனூரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் எஸ்.பி. வம்சித ரெட்டி உத்தரவின் பெயரில் போலீசார் ரோந்து.
வில்லியனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென எஸ்.பி., வம்சித ரெட்டி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, வில்லியனூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது சாலைகளை ஆக்கிரமிப்பு செய்த நான்கு கடைகளை அப்புறப்படுத்தியும், சந்தேகப்படும் படியான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டும், வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். மேலும் வில்லியனூர் மற்றும் அதனை சார்ந்த சுற்றுவட்டார பகுதிகளிலும் தொடர்ந்து
போலீசார் இரவு ரோந்து பணிக்கு செல்வதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவித்தனர்.
No comments