பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரத்தில் ரேனியஸ் பல்நோக்கு மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா.
நெல்லை திருமண்டலம் சார்பில் பாளை டக்கரம்மாள்புரத்தில் ரேனியஸ் பல் நோக்கு மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ராபர்ட் புரூஸ் எம்பி, அப்துல் வகாப் எம்எல்ஏ, மேயர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள், நலவாரிய தலைவர் விஜிலாசத்யா னந்த் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
மருத்துவமனைக்கான அடிக்கல்லை ராபர்ட் புரூஸ் எம் பியும், சிற்றாலயத்திற்கான அடிக்கல்லை அப்துல்வகாப் எம்எல்ஏவும் நாட்டினர். ரேனியஸ் வாழ்க்கை வரலாறு குறித்து டாக்டர் அன்புராஜன் விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் தொழிலதிபர் குணசிங் செல்லத்துரை, கவுன்சில் தலைவர்கள் ஜெபராஜ், ஜெபக்குமார், அருள்ராஜ், பிச்சமுத்து, பிரேஜேம்ஸ், துரைசிங், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லயனல் ராஜ். பாளை வட்டார காங்கிரஸ் தலைவர் டியூக்துரைராஜ் மற்றும் திருமண்டல குருவானவர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள், சபை மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருமண்டல மருத்துவ மனை கண்காணிப்பாளர் டாக்டர்.ஜெயம்ஜூலியட் வரவேற்றார். ஜெயராஜ் அன்னபாக்கியம் மருத்துவமனை கண்காணிப்பாளர் பால்ராபின்சன் நன்றி தெரிவித்தார்.
No comments