தரங்கம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் தேங்கிய மழைநீர் , சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் அவதி :-
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தரங்கம்பாடி பகுதியில் காலை முதல் தற்போது வரை 51 மில்லிமீட்டர் கனமழை பதிவாகியுள்ளது. இதனால் தாழ்வாக உள்ள பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து காலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக தரங்கம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம் போல் மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று சிகிச்சை பெறவந்த வெளி நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் டாக்டர்கள் என அனைவரும் மருத்துவமனை உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் பெறும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் பேரூராட்சி நிர்வாகம் மருத்துவமனை முன்பு தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து மழை நீர் தேங்காதவாறு அரசு மருத்துவமனை வளாகத்தை சீரமைக்க வேண்டும், வடிகால்களை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோன்று தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக தாழ்வான பகுதி குடியிருப்புகளில் மழை நீர் தேங்கியுள்ளது தில்லையாடி ஊராட்சி அமிர்தா நகரில் குடியிருப்புகளை மழைநீர் தேங்கியுள்ளது அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.
No comments