உள்ளாட்சித் தேர்தலில் நடத்த வலியுறுத்தி புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
பேட்டி: பேராசிரியர் ராமதாஸ் Ex.MP (தலைவர் புதுவை மாநில மக்கள் முன்னேற்ற கழகம்),
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 13 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதை கண்டித்தும் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தியும் புதுச்சேரி மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் தலைமையில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் 6 கட்டங்களாக போராட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று காரைக்காலில் சிங்காரவேலன் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கணபதி சுப்ரமணியம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை 13 ஆண்டுகளாக நடத்தாத புதுச்சேரி மாநில அரசை கண்டித்தும் உள்ளாட்சித் தேர்தலில் நடத்த வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய கச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் ராமதாஸ் "புதுச்சேரி அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கையை உடனடியாக பெற்று அமைச்சரவையில் ஒப்புதல் பெற்று உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் எனவும் புதுச்சேரி தேர்தல் ஆணையத்தின் பதவியை நிரப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் உயர் நீதிமன்றத்தை நாடி புதுச்சேரி அரசால் நியமிக்கப்பட்ட தனியார் ஆணையம் ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டிய வேலையை 36 மாதங்களாக முடிக்காமல் உள்ளதற்கு உரிய நிவாரணத்தை பெறுவோம் என்றும், அத்துடன் பிரதமரை சந்தித்து உள்ளாட்சி தேர்தலில் நடத்த வலியுறுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments