புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர் சந்திப்பு..
மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் துறைகளில் மிக முக்கியமானது காவல்துறையாகும்.கடந்த சில வருடங்களாக காவல்துறையின் செயல்படாத தன்மையினால் காவல்துறையின் நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர்.
அரசின் தவறான சட்டவிரோத முடிவுகளை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் காவல்துறையினரால் நம் மாநிலம் சீர்கெட்டு போய் உள்ளது.வருவாய் ஒன்றே மனதில் கொண்டு சுற்றுலா என்ற பெயரில் புதுச்சேரியில் நடைபெறும் அனைத்து சட்டவிரோத செயல்களுக்கும் இரு கதவுகளையும் அகல திறந்து வைப்பது தவறான ஒன்றாகும். வருவாய் பெருக்க பலவிதத்தில் வாய்ப்புகள் இருந்தும் அதையெல்லாம் விட்டுவிட்டு நம் கலாச்சார பெருமையை பணத்திற்காக விற்பனை செய்யும் கேந்திரமாக புதுச்சேரி மாநிலம் மாற்றப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் அவர்களின் அத்துமீறிய செயல்களுக்கு பாதுகாக்கும் காவலர்களாக காவல்துறையினர் செயல்படுவதும் தவறான ஒன்றாகும்.
புதுச்சேரி காவல்துறை சட்டம் ஒழுங்கு,சைபர் க்ரைம், சிபிசிஐடி, போக்குவரத்து காவல்துறை, காவல்துறை சிறப்பு எஸ்.டி.எப்.,பொருள் தடுப்பு பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் செயலிழந்து தோல்வியடைந்து உள்ளன.
சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் ஒரு டி.ஜி.பி, இரண்டு டிஐஜி, நான்கு எஸ். எஸ். பி. 21 எஸ். பி- க்கள் நூற்றுக்கணக்கான இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், உள்ளிட்டவர்கள் இருந்தும் மது, மங்கை, சூதாட்டம்,போதைப் பொருள் நடமாட்டம், சட்டவிரோத செயல்கள், கலாச்சார சீரழிவுகள் இவைகள் அனைத்தையும் தடுக்கப்படவில்லை.
ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இருக்கக்கூடிய கிரைம் காவலர்களுக்கு அந்தந்த பகுதியில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் அனைத்தும் தெரியும். இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கிரைம், பி.சி, என்றாலே கலெக்ஷன். பிசி என்ற அளவில் அவர்களது செயல்பாடு உள்ளது.
புதுச்சேரி காவல்துறை ஜாதி, மொழி அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து செயல்படுகின்றனர் இது காவல் துறைக்கு ஏற்புடையது அல்ல.
புதுச்சேரி நகர பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஸ்பா, மசாஜ் சென்டர்கள் உள்ளன.மாநில முழுவதும் நீக்கம் நிற நிறைந்துள்ள ரெஸ்ட்டோபார்களில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம், அதன் இறுதியில் அங்குள்ள அறைகளில் பாலியல் உடலுறவுக்காகவும் வெளி மாநில இளைஞர்கள் தேனில் வண்டுகள் மொய்ப்பது போன்று புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் தஞ்சம் அடைகின்றனர்.பல்வேறு ரெஸ்டோபார்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கஞ்சா ஆயில் மெத், ஹெராயின், போன்ற வீரியமிக்க போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுகின்றன. வெளியில் தெரியாத பாலியல் வன்முறைகள் கூட்டு பலாத்காரங்கள் சிறுமி,சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து அவ்வப்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகின்றன. இது போன்ற சட்ட விரோத செயலுக்கு புதுச்சேரி காவல் துறையினர்
பார்வையாளராக வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதனால் புதுச்சேரி மாநிலம் மெல்ல மெல்ல என தனது கலாச்சாரத்தை இழந்து வருவதை ஆட்சியாளர்கள் உணராமல் இருப்பது வியப்பாக உள்ளது.
புதுச்சேரியின் நகரப்பகுதியில் மசாஜ் சென்டர், ஸ்பா என பல்வேறு சட்டவிரோத செயலுக்கு அனுமதி அளிப்பதால் நகராட்சி நிர்வாகத்திற்கு பெரிய வருவாயும் ஏதுமில்லை. ஒரு மசாஜ் சென்டர் நடத்த லைசென்ஸ் வாங்கும்போது லைசென்ஸ் கட்டணம் வெறும் 4000 ரூபாய் தான் ஆனால் மாநில முழுவதும் உள்ள மசாஜ் சென்டர்கள் மாதந்தோறும் காவல்துறைக்கு கப்பம் கட்டி வருகின்றனர்.
கடந்த பத்து தினங்களுக்கு முன்பு புதிய சீனியர் எஸ். பி. யாக திரு கலைவாணன் என்பவர் பதவி ஏற்றார் அவர் பதவி ஏற்றவுடன் சட்ட ஒழுங்கு சம்பந்தமாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் லாட்டரி விற்பனை, கஞ்சா விற்பனை,போதை பொருள் தடுப்பு ,மசாஜ் சென்டர்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.அதன் அடிப்படையில் ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்ட லாட்டரி விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஏன் இந்த நடவடிக்கை புதுச்சேரி காவல்துறையினரால் எடுக்கப்படவில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள சீனியர் எஸ். பி. அவர்கள் அவர்களின் செயல்பாட்டிற்கு அதிமுக சார்பில் வாழ்த்துக்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் சுமார் 22 லட்சம் உடன் பிடிப்பட்ட நபர் சம்பந்தமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன. இதில் காவல்துறையின் தீவிர விசாரணைக்கு பிறகு அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்துள்ளனர்.. இது ஒரு சரியான நடவடிக்கை இல்லை.ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டது அந்த இன்ஸ்பெக்டர் செய்த தவறுக்குறிய தண்டனை அல்ல. நியாயமாக அந்த இன்ஸ்பெக்டர் மீது பி.என். எஸ் சட்டப்படி செக்ஷன் 318 மற்றும் 303 திருட்டு,திருட்டு வழக்கு தொடர வேண்டும்.
சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் கணக்கில் வராத அளவுக்கு அதிகமான பணத்தை ஒருவர் வைத்திருப்பதை கண்டுபிடித்தால் அவர் உடனடியாக அந்த காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள மாவட்ட நீதிபதி,அவரகளிடம் அனுப்பி இருக்க வேண்டும் அல்லது வணிகவரித்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து இருக்க வேண்டும் .
பணத்திற்குரிய ஆவணம் சரியாக இருந்தால் சரி பார்த்து அவரே திருப்பி கொடுத்து இருக்கலாம். ஆனால் இவை எதையும் அவர் செய்யவில்லை. மாறாக மோசடியும் திருட்டும் செய்யப்பட்டுள்ளது. மோசடி, திருட்டு இது போன்ற குற்றத்திற்கு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்வது மட்டும் உரிய தண்டனையாக இருக்காது.தவறு செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களை காவல்துறை டிஜிபி அவர்கள் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பின் அதிமுக மாநில செயலாளர் திரு. அன்பழகன் அவர்கள் தெரிவித்தார்.
No comments