புதுச்சேரி ஸ்ரீ கெங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் இந்து சமய சனாதன வேதாகம திருமுறை திவ்யபிரபந்த வளர்ச்சி பெருவிழா.
புதுச்சேரி திருக்காஞ்சியில் அமைந்துள்ளது ஸ்ரீ கெங்கைவராக நதீஸ்வரர் ஆலயம். இந்து சமய சனாதன வேதாகம திருமுறை திவ்யபிரபந்த வளர்ச்சி பெருவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்று , சிறந்த சைவாகம தொண்டிற்கான விருதினை திருக்கண்ணங்குடி பகுதியை சேர்ந்த பாலாமணி சிவாசாரியார், காரைக்கால் பகுதியை சேர்ந்த சேர்வேஸ்வர சிவாசாரியார் மற்றும் பல்வேறு சிவாசாரியர்களுக்கு சிறந்த ஆலய கைங்கரியம், சிறந்த ஆன்மீக பணி , ஆலய நித்திய பூஜையில் இசை அர்ப்பணிப்பு உள்ளிட்ட விருதுகளை வழங்கினார்.
இந்த விழாவில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், வேளாண்துறை அமைசர் தேனீ ஜெயக்குமார் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments