காரைக்காலில் புதுச்சேரி விடுதலை நாள் விழா. காமராஜர் அரசு அலுவலக கட்டடத்தில் திருநங்கை முதல் முறையாக தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
புதுச்சேரி மாநிலம் முழுவதும் இன்று புதுச்சேரி விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் இன்று புதுச்சேரி விடுதலை நாள் விழாவினை முன்னிட்டு குடிமைப் பொருள் வழங்கல் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை என 20க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் காமராஜர் அரசு நிர்வாக வளாக கட்டிடத்தில் குடியரசு தினம், சுதந்திர தினம், புதுச்சேரி விடுதலை தினம் உள்ளிட்ட நாட்களில் அரசு அதிகாரிகள் தேசிய கொடி ஏற்றி வைப்பது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு முதல் முறையாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவின் பேரில் காரைக்கால் பகுதியை சேர்ந்த பூமிகா என்கின்ற திருநங்கை காமராஜர் அரசு வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் கலந்துகொண்டு திருநங்கை பூமிகாவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் திருநங்கை பூமிகா தங்களுக்கு இந்த வாய்ப்பளித்ததற்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
No comments