தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து அவரது உருவப்படத்தை கிழித்து தீயிட்டு கொளுத்தி புதுச்சேரி பாமகவினர் மறியல்..
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லமால், தினமும் ஏதாவது அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார் என்றும், அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த கருத்துக்கு அக்கட்சியினர் மத்தியில் கண்டனங்கள் கிளம்பி உள்ளது.
இந்த நிலையில்,பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பற்றி அவமரியாதையாக பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து, புதுச்சேரியில் பாமகவினர் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் கருப்பு கொடி ஏந்தி புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ஸ்டாலினின் உருவப்படத்தை கிழித்து எரிந்தும், தீயிட்டு கொளுத்தியும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மருத்துவர் ராமதாஸ் அவரிடம், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேள் என்று கோஷங்கள் எழுப்பினர். அரைமணி நேரம் ஈடுபட்ட சாலை மறியல் போராட்டத்தை அடுத்து காவல் துறை அறிவுத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.
No comments