கடலூர் மாவட்டம் மஞ்சக்கொள்ளை சம்பவத்தை கண்டித்தும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் உளுந்தூர்பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் தலைமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வலியுறுத்தியும் அரசியல் கட்சித் தலைவர்களை விமர்சித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
செய்தியாளர்களுக்கு பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் கடலூர் மாவட்டம் மஞ்சக்கொள்ளை கிராமத்தை சேர்ந்த வெள்ளைதுரை என்ற வன்னிய இளைஞரை வழிமறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடுமையாக தாக்கி உள்ளனர் எந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குண்டல்களை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் பாதிக்கப்பட்ட மஞ்சகொள்ளை கிராம மக்களை கடந்த 4ம் தேதி நேரில் சந்தித்து ஆறுதல் கூற வந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் அருள்மொழியை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்தி ஆர்ப்பாட்டத்தில் கடுமையாக விமர்சனம் செய்ததோடு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அரசியல் தலைவர்கள் குறித்து ஒரு கும்பல் அவதூறு பரப்பி வருகிறது தமிழகத்தில் பொதுவாக அரசியல் கட்சித் தலைவர்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் சமூக விரோத கும்பல் சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி கலவரங்களை உண்டாக்க வகையில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களை கண்டறிந்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். என்று கூறினார்.
No comments