தில்லையாடி மின் பாதையில் மின் நிறுத்தம் மின்சார துறை அறிவிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் கோட்டத்திற்குட்பட்ட தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் II KV தில்லையாடி மின் பாதையில் பருவ கால பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் II KV தில்லையாடி மின் பாதையில் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான வள்ளியம்மை நகர், தில்லையாடி, தொடரி பேட்டை, டி..மணல்மேடு, திருவிடைக்கழி, கண்ணங்குடி, கிள்ளையூர், மாத்தூர், முப்பெரும்பூர், நட்சத்திரமாலை, சீவக சிந்தாமணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நவம்பர் 7ந் தேதி வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது மின் நிறுத்தம் செய்யப்படும் என செம்பனார்கோவில் மின் உதவி செயற்பொறியாளர் (இயக்குதலும், பராமரித்தலும்) சரவணன் தகவல் பொதுமக்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மின் நிறுத்தம் செய்வது மின் கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களை பொறுத்து கடைசி நேரத்தில் மாறுதலுக்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments