Breaking News

ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது..

 


புதுவை காவல்துறையில் 'ஆபரேஷன் திரிசூலம்' என்ற திட்டம் புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை குறைப்பதற்கும் மற்றும் ரவுடிகளை ஒழிப்பதற்குமாக தொடங்கப்பட்டது. இதன்படி, ரௌடிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், அவர்கள் வீட்டில் ஆயுதங்கள் அல்லது வெடி பொருட்கள் ஏதேனும் பதுக்கிவைத்துள்ளார்களா என்பதை ஆராய்வதற்கும்,இன்று அதிகாலை டிஐஜிபி சத்தியசுந்தரம் உத்தரவின் பேரில், சீனியர் எஸ்பி கலைவாணன் தலைமையில் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

இந்த சோதனையில் 260-கும் மேற்பட்ட குற்ற பின்னணி உடைய நபர்களை அவர்களது வீட்டில் சென்று ஆய்வு செய்தனர். இதில், 5 நபர்கள் மீது ஆயுதம் வைத்திருந்ததற்காக வழக்கு பதியப்பட்டன, 46 நபர்கள் மீது தடுப்பு நடவடிக்கையின் கீழ் வழக்கு பதியப்பட்டன, 3 பிடியாணை நிறைவேற்றப்பட்டது. மேலும், அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் ஒரு நபர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டது.

No comments

Copying is disabled on this page!