திருக்கனூர் அருகே வீடு புகுந்து செல்போன் திருடிய இரண்டு இளைஞர்களை போலிசார் கைது செய்தனர்.
திருக்கனுார் அடுத்த சோம்பட்டு திருவண்ணாமலை மெயின் ரோட்டை சேர்ந்தவர் கலைச்செல்வன், தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சவுமியா, 22. இவர் தனது ரூ.27 ஆயிரம் மதிப்பிலான மொபைல் போனை கடந்த 30 ம் தேதி வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு துாங்கியபோது, திடீரென மாயமானது.
இதுகுறித்து சவுமியா அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திருக்கனுார் ஏரிக்கரையில் சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த 2 பேர், போலீசார் நேற்று பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், செட்டிப்பட்டு புது நகரை சேர்ந்த சக்திவேல், 18; பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த குணசீலன், 21; என்பதும், சோம்பட்டில் வீட்டில் போனை, திருடி வேறு ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் நேற்றிரவு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், திருடிய மொபைல் வைத்துள்ள நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments