துணை மேயர் ஜெனிட்டா தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்முகாம்:
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில், துணை மேயர் ஜெனிட்டா பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு துணை மேயர் ஜெனிட்டா தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன், கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், தீர்வை, குடிநீர் கட்டணம் போன்றவற்றில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் போன்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. சமீபத்தில் அண்ணா பேருந்துநிலையத்தில் விதிமுறைகளை மீறியதாக சீல் வைக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் வீதிமுறைகளை மீறாத வகையில் செயல்படுவோம் என உறுதிமொழி பத்திரம் கொடுத்து அபராத தொகை கட்டுவதாக உறுதியளித்து மனு அளித்தனர்.
நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸின், தனலட்சுமி, மரியகீதா, மும்தாஜ், ராமுஅம்மாள், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளர்கள் ராமசந்திரன், இர்வின் ஜெபராஜ், நகர்நல அலுவலர் சூர்யபிரகாஷ், இளநிலை பொறியாளர் பாண்டி, குழாய் ஆய்வாளர் மாரியப்பன், வட்ட செயலாளர் கதிரேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
No comments