ஆதி திருவரங்கம் கோயிலில் பசுமடம், பக்தர்கள் தங்கு விடுதி, அன்னதான கூடத்திற்கு பூமி பூஜை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதிதிருவரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலைய துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு கீழ்கண்ட பணிகளான
1.பசுமடம் கட்டும் பணி ரூ.42,50,000/− 2.பக்தா்கள் தங்கும் விடுதி கட்டும் பணி ரூ.86,50,000/− 3.பணியாளா் குடியிருப்புகள் கட்டும் பணி ரூ.29,20,000/− 4.அன்னதானக்கூடம் கட்டும் பணி 49,00,000/− ஆகிய கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டும் பணி இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்த் அண்ட் கார்த்திகேயன் பூமி பூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி அனைத்து பணிகளையும் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட அறங்காவர் குழு தலைவர், ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மற்றும் மாவட்ட, ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அறங்காவலர் குழு மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments