Breaking News

பாலாறு பெருவெள்ள நினைவு தினம் பெருவெள்ளத்தில் உயிர் நீத்த மக்களுக்கு நினைவஞ்சலி.


கர்நாடக மாநிலம் நந்தி துர்க்கம் மலையில் துவங்கும் பாலாறு ஆந்திராவை கடந்து தமிழக பகுதிக்குள் பிரவேசிக்கும் இடம் வாணியம்பாடி பருவ காலங்களில் மட்டும் பாலாத்தில் வெள்ளம் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 1903 ஆம் ஆண்டு நள்ளிரவில் திடீரென பாலாற்றில் ஏற்பட்ட பெருவள்ளம் வாணியம்பாடியை மூன்று துண்டுகளாக பிரித்து வெள்ளத்தில் மூழ்கடித்தது இதில் வாணியம்பாடி பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். 


இதுகுறித்து அப்போதைய இந்திய கவர்னராக இருந்த கர்சன் பிரிட்டிஷ் ராணிக்கு தந்தி அனுப்பியும் இந்த தகவலை தெரிவித்துள்ளார் மேலும் இத்தகவலை லாஸ் ஏஞ்சல்ஸ்  இருந்து வெளியாகும் நாளிதலான இந்த கால் நாளிதழும் உறுதிப்படுத்துகிறது. 


இந்த துயரச்சம்பத்தை அடையாளப்படுத்தும் வகையில் தற்போது வணிக மயமாக்கப்பட்ட வாணியம்பாடியில் சந்தையில் நடுவில் இடுக்கில் சிக்கிக் கொண்டிருக்கும் ஒரு நடுக்கல் சுட்டிக்காட்டுகிறது இந்த கல் வாணியம்பாடியில் எவ்வளவு வெள்ளம் சென்றது என்பதை குறிக்கும் வகையில் அப்போதைய பிரிட்டிஷ் ஆட்சியரால் அமைக்கப்பட்ட இந்த நடுக்கல் தான் தற்போது வரை வாணியம்பாடியில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கான அடையாளமாக கருதப்படுகிறது.


இந்த நாளை நினைவுக்கு ஊறும் வகையில் வாணியம்பாடி வாரச்சந்தை பொதுநல அமைப்புகள் ஒன்றிணைந்து இதற்காக நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் வாணியம்பாடி நகர மன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன், நகர மன்ற உறுப்பினர்கள் 100 க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்றினைந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.


பாலாற்றில் திரும்பும் பக்கங்கள் எல்லாம் கட்டிட இடுப்பாட்டு கழிவுகள் குப்பை கூழங்கள், தோல் தொழிற்சாலைகள் மூலம் பாலாற்றில் நேரடியாக வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீர் மற்றும்  பாலாற்றில் கொட்டப்படும் தோலா கழிவுகள் என பாலாறு பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் தொடர்ந்து சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையால் தமிழகத்தில் துவங்கும் பகுதியிலேயே பாலாறு அழியும் சூழல் உருவாகிவிட்டது இதனால் பாலாற்றை பாதுகாக்க வேண்டும் என நிகழ்வில் பங்கேற்ற அனைவரதும் ஒருமித்த கருத்தாக ஒலித்து. மேலும் வெள்ளத்தில் உயிர் நீத்த மக்களின் நினைவு கூறும் வகையில் வாணியம்பாடி வாரச்சந்தை ரவுண்டானா பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நினைவுத்தூள் ஒன்றும் வாணியம்பாடி நகராட்சியால் அமைக்கப்பட்டு வருகிறது.


- பு.லோகேஷ் திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் 

No comments

Copying is disabled on this page!