பெரியகுளம் அருகே அரசு தோட்டக் கலை கல்லூரியில் அங்கக வேளாண்மை கருத்து காட்சி.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாரம் சார்பாக பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களில் அங்கக வேளாண்மை குறித்த கருத்து காட்சி தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பெரியகுளத்தில் நடைபெற்றது.இக் கருத்து காட்சியினை தோட்டக்கலை துணை இயக்குனர் (தேனி) நிர்மலா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி. ஷஜீவனா அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றி அங்கக வேளாண்மை குறித்த கையேட்டினை வெளியிட்டார்.தேனி மாவட்டத்தின் பல்வேறு வட்டாரங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், வேளாண்மை தோட்டக்கலை வேளாண்மை வணிக அலுவலர்கள், பங்கேற்று சிறப்பித்தனர். கல்லூரி முதல்வர் ஜெ ராஜங்கம் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வளர்வதிஅவர்கள் அறிமுக உரையாற்றினார்கள். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
No comments