தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் நினைவுநாளையொட்டி த.மா.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை!
வ.உ.சிதம்பரனாரின் நினைவுநாளையொட்டி தூத்துக்குடியில் த.மா.கா சார்பில் மத்திய மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திரபோராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 88ஆவது நினைவுநாளையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு அலுவலக வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், மாநில இணை செயலாளர் திருப்பதி, மாநில செயற்குழு உறுப்பினர் ரவிக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்ராஜ், மாவட்டசெயலாளர்கள் கிரிசீனிவாசன். கஜன், மாநகர செயலாளர் ரவீந்திரன், வட்டார தலைவர்கள் முருகன், அய்யம்பாண்டி, பொன்ராஜ், முரளிகார்த்திக், இளைஞரணி இனைசெயலாளர் பீரவீன், தொழிற்சங்க தலைவி வீரலெட்சுமி ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments