உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் நூலகம், மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா துவக்கி வைத்தார் !
தமிழ்நாடு துணை முதல்வர், திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 47–வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில திமுக சார்பில், ஒரு மாதம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, மருத்துவ முகாம்கள், கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் டாக்டர் நித்திஷ், அகிலன் ஆகியோர் ஏற்பாட்டில், மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட காட்டேரிக்குப்பம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா, கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் விழா, பல்நோக்கு மருத்துவ முகாம் மற்றும் ஏழை, எளியோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு வருகை புரிந்தவர்களை, மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., வரவேற்று பேசினார். மாநில துணை அமைப்பாளர் ஏ.கே. குமார் முன்னிலை வகித்தார்.
மாநில கழக அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா விழாவிற்கு தலைமை வகித்து, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து கழக கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், மொழிப்போர் தியாகிகள் கவுரவிப்பு மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு தட்டுவண்டிகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல்நோக்கு இலவச மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.
மணக்குள விநாயகா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் நடத்திய இலவச மருத்துவ முகாமில் 300–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
No comments