Breaking News

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில திமுக இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு இலவச பஸ் டெம்போ..!!

 


தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில திமுக சார்பில் மாநிலம் முழுவதும் தொகுதிகள் வாரியாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான இன்று, புதுச்சேரி மாநில திமுக இளைஞரணி சார்பில் விடியல் பயணம் என்ற கருத்தை மையப்படுத்தி, இன்று புதுச்சேரி முழுவதும் பொதுமக்களுக்கான இலவச பேருந்துகள் மற்றும் டெம்போ பயணம் தொடக்க விழா திமுக மாநில இளைஞரணி அமைப்பாளர் சம்பத் எம்.எல்.ஏ தலைமையில் புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் நடைபெற்றது.


இதில் சிறப்பு விருந்தினராக திமுக மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கலந்து கொண்டு பொதுமக்களுக்கான இலவச பேருந்து மற்றும் டெம்போ பயணத்தை தொடங்கி வைத்தார். அதன்படி இன்று ஒரு நாள் முழுவதும் புதுச்சேரியில் நகரப் பகுதியில் இயக்கப்படும் 47 பேருந்துகள் மற்றும் 25 டெம்போக்களில் பொதுமக்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைந்தால், தமிழகத்தைபோல் புதுச்சேரியிலும் விடியல் பயணம் திட்டம் கொண்டுவரப்படும் என சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments

Copying is disabled on this page!