Breaking News

தூத்துக்குடி மாவட்ட சங்குகுளி தொழிலாளர் சங்கம் சார்பில் உலக மீனவர் தினம்: அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவி..!

 


உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சங்குகுளி தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அனைத்து சங்குகுளி தொழிலாளர் சங்கங்கள், முத்து மாநகர் சங்கு வியாபாரிகள் நலச்சங்கம் இணைந்து நடத்திய 7 ஆவது ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திரேஸ்புரத்தில் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மாவட்ட அண்ணா சங்குகுளி தொழிலாளர் சங்க தலைவர் இசக்கி முத்து தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் பேரவை மாநில செயல் தலைவர் விநாயகமூர்த்தி, வீராங்கனை பேரவை ஒருங்கிணைப்பாளர் பாத்திமாபாபு, அண்ணா சங்குகுளி தொழிலாளர் சங்க துணைத்தலைவர் மாரிலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நாட்டுப்படகு ஒருங்கிணைப்பாளர் ராஜரூபேஸ் ரீகன் வரவேற்றார். 

விழாவில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பங்கேற்று மீனவர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கினார். தொடர்ந்து மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கி, பின்னர் ஏழை எளியோருக்கு அரிசி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், மீனவர் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்காக பணியாற்றுவதே பெருமைதான். அதே வேளையில் பொதுமக்களின் மகிழ்ச்சிதான் எனது மகிழ்ச்சி. ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற விழா எடுக்கவேண்டும் என்றால், எப்பொழுதும் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இயற்கையோடு போராடி எதிர்ப்பு வாழ்க்கை வாழும் மீனவ தொழிலாளர்களின் சிரமத்தை நான் அறிவேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலைஞர் வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார். அனைவரும் முதலமைச்சருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், மீன்துறை இணை இயக்குநர் சந்திரா, உதவி இயக்குநர் புஷ்ரா சப்னம், கடலோர காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாமன்ற உறுப்பினர் பவானி மார்ஷல், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், முன்னாள் மாமன்ற அமாலுதீன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் எமல்டன், மேட்டுப்பட்டி முத்தரையர் ஊர்த்தலைவர் அழகுவேல், முத்தரையர் நலச்சங்க தலைவர் சந்தனசெல்வம், முத்துமாநகர் சங்கு வியாபாரிகள் சங்க தலைவர் மீராசா, சிதம்பரநகர் சங்குகுளி சங்க தலைவர் பரமசிவம், விவேகானந்தர் வளைச்சு வலை மீன்பிடி சங்க தலைவர் மணிராஜ், அண்ணா சங்குகுளி தொழிலாளர் சங்க செயலாளர் முருகையா, பொருளாளர் விமல்சன், தஸ்நேவிஸ் வாஸ், அகமது, பாலன், கேப்டன் முனியசாமி, சன்னாசி உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments

Copying is disabled on this page!