உழவர்கரை தொகுதி திமுக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார்.!
தமிழ்நாடு துணை முதல்வர், திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 47–வது பிறந்த நாளை ஏழை, எளியோர்க்கு நலத்திட்டம் வழங்கும் விழாவாக ஒரு மாதம் முழுவதும் கொண்டாட புதுச்சேரி மாநில திமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.
அதனடிப்படையில் உழவர்கரை தொகுதி திமுக சார்பில், ஏழை, எளியோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஜவகர் நகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் இன்று காலை நடந்தது.தொகுதி செயலாளர் கலிய கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருட்செல்வி, வழக்கறிஞர் அணி தலைவர் லோககணேசன், தொகுதி அவைத்தலைவர் விஜயரங்கன், வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் தாமோதரன் ஆகியோர் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், திமுக மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 500 பெண்களுக்கு புடவை, ஏழை, எளியோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, சிறப்புரை ஆற்றினார்.
இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் வி. அனிபால் கென்னடி, இரா. செந்தில்குமார், மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ். கோபால், வேலவன், டாக்டர் மாயக்கிருஷ்ணன், அமுதாகுமார், நர்கீஸ், மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments