Breaking News

ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கோவில் மண்டபத்தை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஜேசிபி எந்திரங்கள் மூலம் இடித்து ஆக்கிரமிப்பை அகற்றினர்..

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூலசமுத்திரம் கிராமத்தில் பாதை மற்றும் பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்து கிராம மக்கள் காளியம்மன் கோவில் தேர் நிறுத்து அறை, கோவில் வாகனங்கள் மற்றும் முருகன் கோவில் தேர் நிறுத்துவதற்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மண்டபம் கட்டி உள்ளனர். இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது வீட்டிற்கு செல்லும் பாதையையும் பொது இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்து மண்டபம் கட்டி உள்ளதால் தனது வீட்டிற்கு பாதை இல்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள மண்டபத்தை இடித்துவிட்டு பாதையையும் பொது இடத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகளால் நடைமுறைப்படுத்துவதில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிக்கல் இருந்து வந்தது இந்த நிலையில் ஆறுமுகம் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த நீதிபதி நீதிமன்ற உத்தரவை செயல்பட்டாத அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு உடனடியாக நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார் அதன்படி வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மூலசமுத்திரம் கிராமத்தில் நேரில் பார்வையிட்டு அளவீடு செய்து ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த மண்டபத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் இடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது இதைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் டி.எஸ்.பி பிரதீப் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடம் உள்ள பகுதிக்கு வராத வகையில் கயிறு கட்டி பாதுகாக்கப்பட்டு பின்னர் ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு கோவில் மண்டபம் இடிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கோவில் மண்டபம் இடிக்கப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Copying is disabled on this page!