நுாறடிசாலை ரயில்வே சுரங்கப்பாதை சர்வீஸ் சாலை பணி, 17 மாதம் கடந்தும் முடியாததால் பொதுமக்கள் அவதி..
புதுச்சேரி இந்திரா சிக்னலில் இருந்து கடலுார் செல்லும் நுாறடி சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.மேலும் மூடப்பட்ட ரயில்வே கேட் அருகே ரயில்பாதை கீழ் ரெடிமேட் கான்கீரிட் மூலம் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.ஆனால் சுரங்க பாதைக்கு வடக்கு மற்றும் தெற்கு பக்கம் சர்வீஸ் சாலை மற்றும் வடிகால் அமைக்கப்படவில்லை.
சுரங்க பாதையின் இருபுறத்திலும் 75 மீட்டர் நீளத்திற்கு சர்வீஸ் சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் எஸ்.ஐ.டி.பி.ஐ., வங்கியில் புதுச்சேரி அரசு ரூ. 5.38 கோடி கடன் பெற்றது.
கடன் தொகை மூலம் பொதுப்பணித்துறை சர்வீஸ் சாலை அமைக்கும் பணியை கடந்த ஆண்டு மே 10ம் தேதி துவங்கியது. 10 மாதத்தில் கட்டி முடிக்க தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது.ஆனால், 17 மாதம் கடந்தும் இதுவரை சுரங்கப்பாதை சர்வீஸ் சாலை பணி முடியவில்லை. கட்டுமான பணிகளை முடித்து சுரங்கப்பாதை சர்வீஸ் சாலையை திறக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments