வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பக்கிள் ஓடை முகத்துவாரத்தை தூர்வாரும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி திரேஸ்புரம் பக்கிள் ஓடை முகத்துவார பகுதியை தூர்வாரும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை முன்னெச்சரிக்கையாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், புதிய மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள கால்வாய்களை தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிது. மேலும், தூத்துக்குடி மாநகரில் ஓடும் பக்கிள் ஓடை தூர்வாரும் பணிள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திரேஸ்புரம் பகுதியில் உள்ள முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், போல்பேட்டை திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் உள்ளிட்டடோர் உடனிருந்தனர்.
No comments