Breaking News

வடகிழக்கு பருவமழை: தூத்துக்குடி எஸ்.பி.ஆல்பர்ட் ஜாண் தடுப்பணை, குளங்களை நேரில் ஆய்வு..

 


வடகிழக்கு பருவமழையை பெய்து வருவதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் கோரம்பள்ளம் மற்றும் சிவகளை உட்பட பல்வேறு பகுதிகளில் தடுப்பணை, குளங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜாண் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜாண் உத்தரவுப்படி மழை, வெள்ளம் மற்றும் புயல் போன்றவற்றால் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மீட்பு பணியை முன்னெடுக்கும் வகையில் பேரிடர் மீட்பு படை குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக வெள்ள பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளாக அறியப்பட்ட கோரம்பள்ளம் மற்றும் சிவகளை உட்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள், தடுப்பணைகளை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜாண் நேரில் பார்வையிட்டு குளத்தின் கொள்ளளவு மற்றும் நீர் இருப்பு குறித்து கேட்டறிந்து, குளத்தின் கரைகள் பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு, காவல்துறையினருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.


செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!