துறைமுக கடற்கரையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் புதிய பூங்கா: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகமும், மாநகராட்சியும் இணைந்து புதிய துறைமுகம் விருந்தினர் மாளிகை பின்புறம் உள்ள கடற்கரையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் புதிய பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதனையடுத்து புதிய பூங்கா அமையவிருக்கும் துறைமுக கடற்கரை பகுதியை மாநகரட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.யின் சீரிய முயற்சியினால் வ.உ.சி துறைமுக சமூக பொறுப்பு நிதி மற்றும் மாநகராட்சி சார்பில் புதிய துறைமுக கடற்கரை நவீன தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட உள்ளது. அந்த வகையில் இந்த கடற்கரையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன், நவீன பூங்காவும் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் சிறந்த கடற்கரையாக தூத்துக்குடி துறைமுக கடற்கரை திகழும். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், திமுக பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments