முதலியார்பேட்டை தொகுதியை சேர்ந்த அதிமுகவினருக்கு புதிய உறுப்பினர் அட்டையை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் வழங்கினார்.
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட அதிமுகவினருக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் இல்லத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், மாநில அம்மா பேரவை செயலாளரும், தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாஸ்கர் கலந்துகொண்டு தலைமை தாங்கி புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் நகரக் கழக தலைவர் செல்வகுமார், தொகுதி செயலாளர் கருணாநிதி, தொகுதி தலைவர் காந்தி, மற்றும் மாநில நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள்,மகளிரணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments