திரு.வி.க. பேச்சு பயிரங்கத்தின் தமிழ்ப்பெரியார் திரு.வி.க விருது வழங்கும் விழா..!
திரு.வி.க. பேச்சுப் பயிரங்கத்தின் மூலம் வழங்கப்படும் தமிழ்ப்பெரியார் திரு.வி.க. விருது இல.வெங்கடனுக்கு வழங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற திரு.வி.க. பேச்சு பயிலங்கத்தின் 16 ஆம் ஆண்டு விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
சென்னையில் திரு.வி.க பேச்சுப் பயிலரங்கம் சுமார் 20க்கும் மேற்பட்ட பூங்காக்களில் செயல்பட்டு வருகிறது. அதன் நிறுவனராக திருக்குறள் தாமோதரன் உள்ளார். இதன் 16-ஆம் ஆண்டு விழா திருவல்லிக்கேணி மகாகவி பாரதியார் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரு.வி.க பேச்சு பயலரங்க நிறுவனர் தாமோதரன் தலைமை வகித்தார். ராஜா முன்னிலை வகித்தார். கர்னல் பிரபாகர் ஹெபர் பங்கேற்று 2024-ஆம் ஆண்டுக்கான திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம் அளிக்கும் உயரிய விருதான தமிழ்ப்பெரியார் திரு.வி.க. விருதை வெங்கடேசனுக்கும், உற்சாகப் பேச்சாளர் விருதை சேரன் மற்றும் கவிஞர் குணசேகரன் ஆகியோருக்கும் வழங்கினார். நிகழ்ச்சியை கவிஞர் உதயகுமார் தொகுத்து வழங்கினார்.
No comments